Saturday, December 12, 2009

3000 மகன்கள், ஒரு தந்தை

ஒரு மனிதர், 3000 மரங்களுக்கும் மேல் வளர்த்துவருகிறார் என்ற செய்த்தியை புதியதலைமுறை புத்தக்த்தில் படித்ததிலிருந்து, அவரை அவசியம் சந்திக்க வேண்டுமென்று தோன்றியது. அவரை நானும் நண்பர் பெரியசாமியும், நேற்று 12.12.2009 சத்தியமங்கலத்தில் அவரது வீட்டில் சந்தித்தபோது எடுத்தசில புகைப்படங்கள். மேலதிக செய்திகளுக்கு இங்கே கிளிக்கி படியுங்கள்.



வாய்க்காலின் நடுவிலே வளர்த்து விட்டமரம்.






 நான் எண்ணிய வரையில் இது 63வது மரம்.




மரங்கள், பச்சை



கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் மரங்கள் மட்டுமே..




கால்வாயின் இரண்டு பக்கங்களிலும் மரங்கள், மரங்கள், மரங்கள்தான்



இந்த மேற்குத்தொடர்ச்சி மரத்தொடர் இப்படியே இன்னும் மூணரை கிலோமீட்டர்வரை தொடர்கிறது.




சுமார் 8000 மரங்களுக்கும் மேல் தனியாளாக நட்டு, காத்து வளர்த்த மனிதர், அய்யாச்சாமி.




அவர், அவரது பேரன் மற்றும் துணைவியார்.



குக்கூ குழந்தைகள் வெளி என்கிற அமைப்பு அவருக்குக் கொடுத்த பட்டயம். இந்த படத்தில் தன்னை அழகாக காட்டியிருக்கிறார்கள், என்று வெகுளியாக சிரித்தார், நான் இந்த படத்தை எடுக்கும் பொழுது.





அவரது அண்டை வீட்டு விஜயகுமார் என்கிற விஜி. இன்றளவில் பெரியவருக்கு தனால் ஆன எல்லா உதவிகளையும் செய்து வருகிறார். பாராட்டுதலுக்குரிய மனிதர்.





மரங்களை காப்பாற்றி வளர்த்ததில் பெரும் பங்கு வகித்தவர், ராசு. மரங்கள் வெட்டப்படும்போதும், அழிக்கப்படும்போதும் நாளிதழ்களிலும், தொலைக்காட்ச்சிகளுக்கும் தெரியச்செய்தவர்.





 நண்பர். பெரியசாமியும் பெரியவர் அய்யாச்சாமியும்





தற்சமயம் பெரியவருக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது, தேவேந்திரன் மற்றும் விஜி (இடமிருந்து வலமாக)




பெரியவருடன் நானும் நண்பர் பெரியும்

23 comments:

  1. படித்தபோதே மனசு ரொம்ப நெகிழ்ந்து போனது அந்த பெரியவரையும்,அவருக்கு உதவுபவர்களையும் நினைத்து.

    அவர் செய்தது சாதாரணமான காரியமில்லை.அதை தெரியப்படுத்திய 'புதிய தலைமுறை'க்கும்,அவரை சந்தித்து நீங்கள் பகிர்ந்து கொண்டதற்கும் ஆட்ஸ் ஆப்.மிக நல்ல பதிவு இது.

    ReplyDelete
  2. wow..! amazing..! அந்தப் பெரியவருக்கு எனது நமஸ்காரங்கள்..! அருமையான... அரிய... அவசியமான பதிவு..! உழைத்த கரங்களைப் பற்றிய நீங்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்..! இப்டி நிறைய பேர உங்கள் புகைப்படக் கருவியும் உங்கள் உள்ளமும் உள்வாங்கட்டும்..!

    ReplyDelete
  3. //மேலதிக செய்திகளுக்கு இங்கே கிளிக்கி படியுங்கள்.//

    எங்கே..? காணோமே..?

    ReplyDelete
  4. //படித்தபோதே மனசு ரொம்ப நெகிழ்ந்து போனது அந்த பெரியவரையும்,அவருக்கு உதவுபவர்களையும் நினைத்து.//

    நன்றி நண்பரே! இப்போ அவருக்கு உதவிசெய்பவர்கள், தி கிரேட்.

    ReplyDelete
  5. நன்றி ப்ரியா, இப்போ படிங்க கரெக்ட் பண்ணிட்டேன். :-)

    ReplyDelete
  6. முரளி, உங்களின் செயல் மகிழ்ச்சியும் பெருமையாகவும் இருக்கிறது.

    hearty wishes.

    ReplyDelete
  7. மிக அருமையான செய்தி.தயவு செய்து அவரது முகவரி, தொலைபேசி எண்ணை தெரியபடுத்தவும்.
    mail: baluamu@gmail.com

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. //சுமார் 8000 மரங்களுக்கும் மேல் தனியாளாக நட்டு, காத்து வளர்த்த மனிதர், அய்யாச்சாமி//...
    Really he's someone very special!
    Excellent photography!

    ReplyDelete
  10. தெருக்களில் அகலப்படுதுவதற்காக மரங்கள் வெட்டப்படும் போது ஒரு கையாலாகாத வருத்தம் தோன்றும். உங்கள் பதிவு அந்த ரணங்களுக்கு மருந்திட்டது. பெரியவர் அய்யாசாமிக்கு ஒரு ஜே !!

    ReplyDelete
  11. he is really great!!!!
    appadeye enaku nalla back ground kedaisudduthu unka photo moolam.. thanks.

    ReplyDelete
  12. Really Amazing.......
    நமக்கு தெரியாமல் இன்னும் எவ்வளவு நல்லவர்கள் இருப்பார்களோ

    ReplyDelete
  13. என்னங்க இது !! இவ்வளவு நல்ல ப்ளாக்கை எப்படி இத்தனை நாள் பார்க்காமல் போனேன்? I was amazed at some of your photes (not only for this post, but for earlier posts also). என் பதிவில் நீங்கள் comment போட்டிருந்தாலும் ஏன் உங்களை இத்தனை நாள் கவனிக்காமல் போனேன் என புரிய வில்லை!!

    பேப்பரில் வந்த செய்தி வைத்து நேரில் போய் பார்த்து பதிவு எழுதிய உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

    உங்கள் ப்ளாக்கை தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் இணைத்து விட்டீர்களா? இல்லா விடில் இணையுங்கள்.

    சென்னையிலா உள்ளீர்கள்? இயலும் போது snehamohankumar@yahoo.co.in என்னும் என் மின் அஞ்சல் முகவரிக்கு தங்கள் தொலை பேசி எண் அனுப்புங்கள்

    ReplyDelete
  14. நான் மிஸ் பண்ணிட்டேன் முரளி....

    சராசரியா இல்லாம...நீங்க செய்தது மிகப்பெரிய விசயம்...

    கண்டிப்பா...எனக்கு தெரிவிக்கவும்...

    ReplyDelete
  15. great old man...real hero....

    ReplyDelete
  16. நான் சில முயற்சிகளில் ஈடுபட்ட தால் இணையம் தவிர வேறு ஊடகங்களை காண நேரவில்லை. உங்களின் இந்த பதிவு என்னை தலை குனிய வைத்தது. காரணம் 25 கி.மீ தொலைவில் இருக்கும் நான் இவரைப் பற்றி இதுவரை அறிந்திருக்கவில்லை.. என்ற காரணமே... பெரியவருக்கு காண சென்னையில் இருந்து வந்த உங்கள் நணபரை நினைத்தால் இன்னும் பெருமையாக இருக்கிறது...

    ReplyDelete
  17. தோழரே(அய்யா பெரியசாமி) உங்களை நினைத்து பெருமை படுகிறேன் நன் இதுவரை என் நாட்டுக்கு என்ன செய்தேன் என்று கவலை படுகிறேன்.
    boseborn4india@gmail.com

    ReplyDelete
  18. அய்யாசாமி, 07.03.2011 அன்று இறந்துவிட்டார் என்று உங்கள் யாருக்கேனும் தெரியுமா?
    புதிய தலைமுறை அவர் இறந்தது பற்றி ஒரு பெட்டிச் செய்திகூட வெளியிடவில்லை.

    ReplyDelete
  19. உங்களுடைய பின்னூட்டம் கிடைத்தது. ஆனால் அதில் ஒரு கோபம் என்பது போல ஒரு தொணி தெரிகிறது. அது தேவையில்லை.
    //அய்யாசாமி, 07.03.2011 அன்று இறந்துவிட்டார் என்று உங்கள் யாருக்கேனும் தெரியுமா?
    புதிய தலைமுறை அவர் இறந்தது பற்றி ஒரு பெட்டிச் செய்திகூட வெளியிடவில்லை.//

    அய்யாசாமி, 07.03.2011 அன்று இறந்துவிட்டார் என்று உங்கள் யாருக்கேனும் தெரியுமா?
    எங்கள் அனைவருக்குமே தெரியும். நானும் அதுபற்றி எழுதியிருக்கிறேன். இதோ என்னுடைய பதிவு
    http://eniyoruvithiseivom.blogspot.com/2011/03/blog-post_07.html
    நான் மட்டுமல்ல வேறு சில பதிவுலக நண்பர்களும் அதை செய்து வருகின்றனர்.

    புதிய தலைமுறை அவர் இறந்தது பற்றி ஒரு பெட்டிச் செய்திகூட வெளியிடவில்லை.//
    தேவையில்லை. அவர் உயிருடன் இருக்கும்போது அவர் பற்றிய செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை, புதிய தலைமுறை.
    அதுபோதும் அதன் மூலமாக நிறைய பேர் அவரை அறிய முடிந்தது. நான் கூட அவரை கண்டுபிடித்தது அப்படித்தான்.
    இதுவரையும் எங்களால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்து வருகிறோம்,

    ReplyDelete
  20. தங்களது 'மற்றொரு' வலைப்பதிவு முகவரியான http://eniyoruvithiseivom.blogspot.com (அன்பேசிவம்) என்பதில் உள்ள, தங்கள் பதிவைப்(http://eniyoruvithiseivom.blogspot.com/2011/03/blog-post_07.html) பார்க்காமல் பின்னூட்டம் இட்டதற்கு மன்னியுங்கள்....

    தாங்கள் அஞ்சலி செலுத்தியது போல், அய்யாவைப் பற்றி புதியதலைமுறையில் வெளிவந்த கட்டுரையைப் படித்தவர்களும்,அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கலாம்(வலைப் பதிவுகளை படிக்க முடியாதவர்கள்) என ஒரு சிறிய விருப்பம்.புதிய தலைமுறையில் 'சென்ற வாரம்' பகுதியில் ஒரு சிறு செய்தியாக அஞ்சலி வெளியிடுவார்கள் என நினைத்தேன்.(எனது கருத்தை அவர்களிடமும் பதிவு செய்தேன்).

    அய்யாசாமி அய்யா விட்டுச் சென்ற உன்னத பணியை அனைவரும் தொடர்வோம்.

    ReplyDelete
  21. நன்றி கார்த்தி, உங்களின் சரியான புரிதலுக்கு. நீங்கள் புரிந்துகொள்ளவே அந்த பின்னூட்டம். புரிந்துகொண்டீர்கள் என்கிற பட்சத்தில் மன்னிப்பெல்லாம் அனாவசியம். நன்றீ கார்த்தி அடிக்கடி வாங்க.... :-)

    ReplyDelete

இதுவரை விழுந்த கருத்துக்குத்துக்கள்